- Sunday
- July 5th, 2026
காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப்பகுதியில் வைத்து நேற்று மாலை ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்...
கடந்த வார இறுதியில்,மிகவும் இரகசியமான அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் இணையத்தில் கசிந்து உலக அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரகசிய ஆவணங்களில் இருந்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பெப்ரவரி 17 ஆம் திகதியிட்ட ஆவணத்தின் ஒற்றை பகுதி, ஜனாதிபதி அல்-சிசி மற்றும் மூத்த எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை...
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி...
எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது. இதற்கமைய...
அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன....
வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வாரிக்கொள்கை மற்றும் அதற்கு எதிரான ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முன்னதாகவும்...
எதிர்வரும் பண்டிகை காலத்தில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி,தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள்,சுற்றுலா பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,"நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட...
தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக் கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். போதைப்பொருளை விற்பனை செய்யும் நபரொருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக நேற்று முன்தினம் (09.04.2023) மாணவர்கள் தங்கியிருந்த...
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தொடருந்து நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக நாடுகடத்தப்பட்ட மரியுபோல் நகரத்தின் மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ(Petro Andriushchenko) தெரிவித்துள்ளார். போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய இராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது....
சைவ சமயத்திக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்கவேண்டும் எனவும், இந்தியா இந்த விடயத்தில் தலையிடவேண்டும் எனவும் சைவ சமய அமைப்புகள தீர்மானித்துள்ளதாக நல்லை ஆதீன முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சைவ சமயம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள்....
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சிங்கள மயமாக்கலுக்கு என அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இந்த தொல்பொருள் திணைக்களத்தோடு முப்படைகளின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கள் இல்லாதொழிக்கப்படுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றில்...
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும்...
அடுத்த சில நாட்களில் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவரின் நடைமுறைக்கு சாத்தியமற்ற முடிவினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள்...
இரவோடு இரவாக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட 17 ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளதாக உக்ரைனின் விமானப்படை கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா, ஈரானில் தயாரிக்கப்பட்ட 17 ஷாஹெட் ட்ரோன்களை அனுப்பி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருங் கடலின் கிழக்கு கடற்கரையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதுவதாகவும் குறித்த ட்ரோன்கள் அனைத்தும் தென்மேற்கில் உள்ள ஒடிசா...
தொல்பொருள் திணைக்களத்தினை கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கை முடக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர் குறுந்தூர்மலை, வெடுக்குநாறி மற்றும் திருகோணமலையில் தொல்பொருட்களை பாதுக்கப்பதாக கூறி அரசாங்கம் ஏற்படுத்தும் குழப்பங்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச...
இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென முதித பீரிஸ் குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி...
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற...
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான கருநாட்டுக் கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்து. குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள தமிழர்களுக்குரிய காணிகளே அபகரிக்கப்பட்டு 180 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த...
உக்ரைன் - ரஷ்ய போர் ஓராண்டினை கடந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் நடவடிக்கையில் போது ரஷ்ய வீரர்கள் அதிகப்படியாக மது அருந்தி போதையில் போரிட்டுள்ளமையே உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த போர்...
Loading posts...
All posts loaded
No more posts
