Ad Widget

70 வயது நபருடன் திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்

113 வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

113-year-old-woman-marries-her-70-year-old-toyboy

மேற்கு ஸின்ஜியங் மாகாணத்திலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழும் அஸ்திஹன் சவுதி என்ற வயோதிப பெண்ணே அம்தி அஹெமது என்ற தனது காதலரை பசு நகரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சவுரியும் அஹெம்தியும் முதன் முதலாக சந்தித்தனர்.

இந்நிலையில் அஹெம்தி சவுரியிடம் அவரைத் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை முதலில் வெளியிட்டபோது சவுரி ஆரம்பத்தில் அதற்கு மறுப்புத்தெரிவித்திருந்தார். அஹெம்தியிடம் காதல் ஏற்பட்டிருந்த போதும் தனது அளவு கடந்த வயதை எண்ணி சங்கடத்துக்குள்ளானார். அவரை திருமணம் செய்வதற்கு சவுரி மறுத்துள்ளார்.

எனினும் அஹெம்தி மனதைத் தளரவிடாது கடந்த ஏப்ரல் மாதம் சவுரியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை மீளவும் வெளியிடவும் அவர் சம்மதித்துள்ளார்.

அந்த திருமணம் குறித்து அஹெம்தி விபரிக்கையில் நாங்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளோம். அவள் என்னைவிட மிகவும் வயது கூடியவள் என்பதை ஒரு பொருட்டாக நான் கருதவில்லை. அவள் என்னை நன்கு கவனித்துக்கொள்கின்றாள். உணவு வேளையில் தனது இறைச்சி உணவின் ஒரு பகுதியை தருகிறாள் என்று கூறினார்.

சவுரி ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுப்புத்தெரிவித்தபோது அவரை இளைஞன் போன்று துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பித்ததாக அவர் தெரிவித்தார்.

Related Posts