7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை, இருவர் கைது

arrestபுத்தூர் வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதன்கிழமை (09) அதிகாலை நுழைந்து வீட்டிலிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டிலிருந்த நகைகள் உள்ளிட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தமை தொடர்பில் இருவரை புதன்கிழமை (09) மாலை கைதுசெய்ததாக அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.சமன்ஜெயசிங்க இன்று தெரிவித்தார்.

ஏழாலை வடக்கு மற்றும் புத்தூர் கலைமதி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிற்குள் மூவர் கொண்ட குழு உள்நுழைந்து வீட்டிலிருந்த 14¼ பவுண் நகைகள் மற்றும் கமரா மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்டவற்றினைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்ட போதே குறித்த இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor