Ad Widget

6 மாதங்­களில் ஒரு­தொ­குதி காணிகள் விடு­விக்­கப்­படும் : டி.எம்.சுவா­மி­நாதன்

அடுத்த ஆறு­மாத காலப்­ப­கு­தியில் மேலுமொ­ரு­ தொ­குதி காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சிறைச்­சாலை, மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து சமய விவ­கார அலு­வ­ல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெற்ற தேசிய தைப்­பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நீண்­ட­கா­ல­மாக தமிழ்­மக்கள் சூரிய பக­வா­னுக்கு நன்­றி­செ­லுத்தும் முக­மாக இந்­நாளை சிறப்­பாக கொண்டாடி­வ­ரு­கின்­றார்கள். இது மிகவும் மகிழ்ச்­சி­யா­க­வுள்­ளது. மூன்று தசாப்த யுத்தம் நிறை­வுக்கு வந்­துள்­ளது. பல துன்ப துய­ரங்­களை கடந்து வந்­தி­ருக்­கின்றோம். சிறந்த எதிர்­கா­லத்தைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்ளோம்.

எமது கட­மை­களை நாம் சரி­யாகச் செய்­ய­வில்­லை­யெனக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யான அனைத்­தை­யும்­உ­ரிய காலக்­கி­ர­மத்தில் படிப்­ப­டி­யாக வழங்­கிக்­கொண்­டே­யி­ருக்­கின்றது.

எமது அர­சாங்கம் உங்­களால் தெரி­வு­செய்­யப்­பட்­டது. உங்­க­ளுக்­கா­ன­தே­வை­களை வழங்­கு­வ­த­னையே முதற்­கட்ட இலக்­காக கொண்­டி­ருக்­கின்­றது. நாம் ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­றதன் பின்னர் வடக்கு கிழக்கில் பல காணி­களை விடு­வித்­துள்ளோம். அடுத்த ஆறு­மாத காலத்­தின் மேலு­மொரு தொகுதி காணி­களை மக்­க­ளி­டத்தில் கைய­ளிப்­ப­தற்கு தயா­ரா­வுள்ளோம்.

தற்­போது சிங்­கப்பூர் பொரு­ளா­தா­ரத்தில் முன்­னிலை நாடாக உரு­வா­கி­வ­ரு­கின்­றது. காரணம் அந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­ப­வ­தற்கு முயன்ற பிர­தமர் முதலில் பொது­மக்­க­ளுக்கு சொந்த வீடு­களை கட்­டிக்­கொ­டுத்தார். அவ்­வா­றி­ருக்­கையில் எமது நாட்­டிலும் எமது மக்­க­ளுக்­காக வீடுகள் அமைக்கும் செயற்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. தற்­போது 65ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான கேள்­வி­கோரல் செயன்மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மிக­வி­ரைவில் அந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. வடக்கு கிழக்கில் குளங்­களை மீளவும் திருத்­தி­ய­மைப்­ப­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளோம்.

அர­சியல் கைதி­களை விடு­விப்­பதே எமது நோக்­க­மா­கவும் உள்­ளது. பலத்த சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் அவர்கள் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டும்­போது புனர்­வாழ்­வ­ளிப்­பது தவ­றா­னது போன்ற கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தனால் அந்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பத்தில் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கின்­றது

தற்போது இடம்பெயர்ந்த மக்கள் 32 முகாம்களில் தங்கியுள்ளார்கள். அவர்களை மீளவும் சொந்த நிலத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கவுள்ளோம். அதேநேரம் எமது அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர திர்வைப் பெற்றுக்கொடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது என்றார்.

Related Posts