Ad Widget

6 பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு

policeவட மாகாணத்திலுள்ள ஆறு பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.தியாகராஜா தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நெல்லியடி, அச்சுவேலி, மானிப்பாய், கனகராயன் குளம், வவுனியா, றம்பைக்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராகவே இந்த முறைபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் ஒரு சிலர் தமது பிரச்சனைகளை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொண்டுள்ளனர்.

இருந்த போதும் எந்த விதமான நடவடிக்கைகளையும் பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.இதில் இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மிகுதி நான்கு பொலிஸ் நிலையங்களில் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அம்முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாயின் அது தொடர்பான தங்களின் முறைப்பாடுகளை பொதுமக்கள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ யாழ். கச்சேரியில் அமைந்துள்ள வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலகத்தில் அறிவிக்க முடியும்.

இதன் மூலம் உரிய பொலிஸ் நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாகவுள்ளது. இதனால் அடுத்த வருடம் முற்பகுதியிலிருந்து வட மாகாணத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகளின் ஊடாக ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் உள்ள பொதுமக்களுக்கு அந்தந்த கிராம அலுவலரும் நானும் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தவுள்ளோம்” என்றார்.

Related Posts