52 மில்லியன் ரூபாவில் நல்லூர் பிரதேச சபைக்கு புதிய கட்டடம்

nallur-ps-நல்லூர் பிரதேச சபைக்கு புறநெகும திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 3மாடி கட்டடம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் வசந்தகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபா செலவில் நல்லூர் பிரதேச சபைக்கு 3 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டட தொகுதியில் சிறுவர் உள்ளக விளையாட்டு அரங்கு , கலாச்சார மண்டபம் மற்றும் அலுவலகமும் அமையவுள்ளது.

எனினும் புறநெகும திட்டத்துடன் 7 வீத சபையின் பங்களிப்புடனும் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா மிக விரைவில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சபை நிதியில் இருந்து 5 மில்லியன் ரூபா செலவில் கோண்டாவிலில் ஆயுள்வேத சேவை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டடமும் இம்மாத இறுதியில் திறந்து வைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor