51 ஆவது படையணியின் இரத்ததான நிகழ்வு

51blood-donaction51 ஆவது பாதுகாப்பு படையணியின் 18 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாதுகாப்பு படையணியின் இரத்ததான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோப்பாயில் அமைந்துள்ள 51 ஆவது படையணியின் தலைமையத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் 200 மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

யாழ்.போதனாவைத்தியசாலை இரத்தவங்கியின் குருதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுபட்டுள்ளதாக 51 படையணி தெரிவித்துள்ளது.

அத்துடன் படையணியின் 18 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சமூக நலத்திட்டங்களும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கவுள்ளதாக 51 ஆவது படையணி தெரிவித்துள்ளது