Ad Widget

5 கோடியைத் தாண்டியது உலக அகதிகளின் எண்ணிக்கை

நேற்று உலக அகதிகள் தினம்… இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை தொட்டுள்ளதாக ஐநா சபையின் அகதிகள் பராமரிப்பு மையம் தெரிவித்துள்ளது.

mukam-akathy

இரண்டாம் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை இப்போதுதான்முதன்முறையாக அதிக அளவில் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த செய்தியானது, 2012இல் 4 கோடியே 90 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, சிரியாவில் நிகழும் உள்நாட்டுப் போரின் விளைவாக பெருமளவு அதிகரித்து விட்டதாக குறிப்பிடுகிறது.

ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவிவரும் சூழ்நிலையே இந்த எண்ணிக்கை பெருக முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.

பாகிஸ்தான், ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் மற்ற நாடுகளை விட அதிக அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Posts