முப்பது வருடங்களின் பின்னர் யாழ் பல்கலை கழகம் இன்கிலாப் இஸ்லாமிய சஞ்சிகையை வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் இந்த சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது
யாழ் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சஞ்சிகையை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி திருமதி.எஸ்.சிவசந்திரன் ,கலைப்பீட பீடாதிபதி வி.பி சிவநாதன் ,பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி.எ.அற்புதராஜ், வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி,மருத்துவ பீட பீடாதிபதி எஸ்.பாலகுமார். மற்றும் விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.