வரையறுக்கப்பட்ட நாட்களில் 250 இந்திய மீனவ படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மீனவர்களினால் இலங்கை கடற்பரப்புக்குள் மேற்கொள்ளப்படும் அழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில் தினம் ஒன்றுக்கு 3000 இந்திய மீனவப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் எனவே இவ்வாறு 250 இந்திய மீனவ படகுகளுக்கு அனுமதியளிப்பது இலங்கைக்கு நன்மையாகவே அமையும் என்று இலங்கை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியதாக நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கையில் இழுவைப் படகு முறைமையிலான மீன்பிடிக்கு தடை கொண்டுவரும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணையொன்றை கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.