24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி!

கிளிநொச்சி – இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts