Ad Widget

2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுங்கள்: விக்கினேஸ்வரன்

vikneswaranதமிழ் மக்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு இந்த தேர்தலில் இருந்து யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். தமிழ் மக்களிற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த தேர்தலில் 2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுங்கள்’ என முன்னாள் நீதியரசரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தமிழ் மக்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு இந்த தேர்தலில் இருந்து யாரும் ஒதுங்கியிருக்க வேண்டாம். தமிழ்மக்களிற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த தேர்தலில் 2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெறச்செய்யுங்கள்.

இந்த வடமாகாண சபை மூலம் நாம் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாம் அமோக வெற்றி பெறவேண்டியவர்களாக இருக்கின்றோம். தற்போது வடாமகாண சபையைப் பொறுத்த வரையில் அனைத்தும் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

இதனால் நாங்கள் சில விடயங்களை மேற்கொள்வதற்கு முன்னகர முடியா சூழலில் இருக்கின்றோம். இத்தகயை நிலையை மாற்றி நாம் முன்நகர்வதற்கு மக்களின் ஆதரவு எமக்கு தேவையாக இருக்கிறது.

எந்த தேர்தல் வந்தாலும் தமிழ்தேசிய கூட்டமைப்புத்தானே வெற்றிபெறும் என்ற சிந்தனையில் பிறகேன் வாக்களிக்கவேண்டும் என பலர் வாக்களிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.

இந்த மனநிலையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட்டு இம்முறை அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது ஒரு முக்கியமானது. இந்த வெற்றிதான் சர்வதேச நாடுகளுக்குச் செய்தியைச் சொல்லப்போகிறது.

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலை தமிழர்களின் போராட்டத்தின் 3ஆம் கட்டத்தின் ஆரம்பமாக மாபெரும் எழுச்சியாக உலகத்திற்குச் காட்டவேண்டும்.

தமிழர்களிற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் இழந்தவைகளை மீளவும் உருவாக்கி எழுச்சி பெறுவோம் என்பதை உணர்த்தும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட்டு கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts