22 இணைய தளங்கள் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன

இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான 22 இணையத்தளங்கள் பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் மூலம் உருக்குலைய செய்யப்பட்டுள்ளன.வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான இணையத்தளங்களே இவ்வாறு உருக்குலைய செய்யப்பட்டள்ளன.

இதில் பொது சேவை ஆணைக்குழு, விளையாட்டு துறை, வேளாண்மை துறை, சுகாதார உள்ளிட்ட அமைச்சின் தளங்களும் உள்ளடங்குகின்றன.

இணையத்தளங்களை உருக்குலைய செய்யமுடியாது என்று விடுக்கப்பட்ட சவாலையடுத்தே இந்த இணையத்தளங்களை உருக்குலைய செய்ததாக தெரிவித்துள்ள பங்களாதேஷ் கிறிஹெக் ஹேக்கர்கள் இணையத்தளங்களுக்குள் உள்நுழைய முடியாதவகையில் பாதுகாப்பை அதிகரித்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.