- Friday
- November 27th, 2026
வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞனை நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்ததுடன் ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுத்துள்ள பொலிஸார். ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதுடன் எதிர்வரும் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில்...
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று (27) வெள்ளிக்கிழமை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விடுதலைப் போரில் முதல் மாவீரனான சத்தியநாதன் நினைவு நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களுக்கான நினைவுகூறும் பொதுநாளக 1989 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வழக்கமாக நவம்பர் மாதம் 21ஆம் திகதி...
முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆகும் நிலையில், அது பற்றி விஜய் சேதுபதி பேசியது வைரல் ஆகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக சர்ச்சை வெடித்தது. அதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுமையாக விஜய் சேதுபதியை சமூக வலைத்தளங்களில் தாக்கி பதிவிட்டு வந்தனர்....
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், 8.52 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 148 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்த வீடுகளை நேற்று (26)தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைத்தார். இதனுடன், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும்...
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இன்னும் பரிசோதிக்கப்படவில்லை!!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எலும்புக்கூடுகள் தொடர்பில் இதுவரை எவ்வித பகுப்பாய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தப் புதைகுழி தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடாத்துவதற்கு நீதி அமைச்சர்...
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய 'ஏ' அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது கட்டாரின் தோஹாவில் நேற்று (26) நடைபெற்று வரும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய 'ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 50...
முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் மாவீரர்களின் குடும்பத்தினரைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் ஏற்பாட்டாளர்களிடம் இலங்கைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களின் தனிப்பட்ட விபரங்களையும் பதிவு செய்துள்ளனர். நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் பொறிக்கப்பட்டிருந்த, தமிழர்களின் தேசிய மலரான கார்த்திகைப் பூவின் உருவத்தை மறைக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நிகழ்விற்கான...
தனியார் வங்கியொன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஒத்த போலி இணையத்தளத்தை உருவாக்கி, நபரொருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாரியபொல கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாடொன்றிற்கு அமைய இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. குறித்த வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே போலி...
இலங்கையில் பக்கவாத (Stroke) நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பிரிவு பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த தசாப்த காலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில் இந்த நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பக்கவாத சங்கத்தினால் நேற்று (26) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே...
