தொடர்ந்தும் சரியும் தங்கம் விலை!!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இதற்கமைய, உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 3,500 டொலர் எல்லையை அண்மித்துள்ளது. இந்த நிலைமையுடன் இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று (20) 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார்த்...

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி தமது முதலாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் குசல் மெண்டிஸ்...
Ad Widget

மரண தண்டனை பெற்றவர்கள் எமது கட்சியினர் அல்லர் – ஈ.பி.டி.பி.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்படாதவர்கள் என்றும் அவர்கள் ராசிக் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக. மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இவர்கள்...

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு: சென்னை – யாழ்ப்பாண விமான சேவைகள் இரத்து!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் நேற்றையதினம் (19) இரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் போதிய பார்வைத் தெளிவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சென்னை – யாழ்ப்பாணம்...

செம்மணி மனிதப்புதைகுழி: அருட்தந்தை அல்போன்சஸ் பேர்னாட்டிடம் தகவல்களைப் பெற நீதிமன்றம் உத்தரவு

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்குமாறு கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்டுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக நேற்று வியாழக்கிழமை (19) பி.ப 2.00 மணி முதல் மாலை 5.30 மணி...

செம்மணி மனிதப்புதைகுழி : வயது வந்தோரின் எலும்புகளுக்கு மேலதிக பரிசோதனை நடத்த அனுமதி

செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சுருக்க அறிக்கையின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும் என மன்று கருதவில்லை எனத் தெரிவித்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையது எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பில் என்புமாதிரி பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழாமுக்கு அனுமதி...

இலங்கை 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி, இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (19), தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை...

பட்டதாரி ஆசிரியர் நியமன நேர்முகத் தேர்வுகள் பிற்போடல்: புதிய திகதிகள் வெளியீடு!

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, இன்று (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் மாத்திரம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ விடுத்துள்ள அறிவிப்பில், நவம்பர் 21ஆம் திகதி...

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவினால் சமாதான பிரகடனம் வௌியீடு!!

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோர் இணைந்து கூட்டு சமாதானப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆசிய -பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் தென்கிழக்கு நகரமான ஷென்சென்னில் (Shenzhen) இம்மூன்று தலைவர்களும் 90...

செம்மணி மனிதப் புதைகுழிகளை அடையாளம் காட்ட முடியாது – சோமரத்ன ராஜபக்

விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ராஜபக்ச , தமக்கு வாக்குமூலம் தந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கிருசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை...

அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று அடையாள வேலைநிறுத்தத்தில்

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2027 வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காததன் காரணமாக, இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 20 நிறைவேற்று சேவைகளைச் சேர்ந்த தொழில்வல்லுநர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணையவுள்ளதாக அக்குழுவின் தலைவர் எச்.ஏ.எல். உதயசிறி...