- Monday
- November 16th, 2026
கொலிவூட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், கடந்த 2024 ஆம் ஆண்டில் அரசியலில் கால்பதித்ததைத் தொடர்ந்து, தான் ஒப்பந்தமாகியிருந்த திரைப்படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுநேர மக்கள் சேவையில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். அதற்கமைய, தனது படப் பணிகளை நிறைவு செய்த அவர், தற்போது திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த...
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி, குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த விபத்தின் போது வாகனத்தை செலுத்திய சாரதி தான் என பொலிஸாரிடம் சரணடைந்த நபர் மதுபோதையில் இருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட...
அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைப்பில் ஏற்பட்ட பாரிய முடக்கத்தால் ஞாயிற்றுக்கிழமயன்று 10,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமைக்குள் (16) சேவைகள் முழுமையாக வழமைக்குத் திரியும் எனப் போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்கா முழுவதும் 2,300-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன், சுமார் 7,700 விமானங்கள் தாமதமாகின....
சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு காலமான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இ்ன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில்...
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்த சிரேஷ்ட அரசியல் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளருமான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்....
சீனாவின் விமான உற்பத்தி நிறுவனமான COMAC தயாரித்துள்ள புதிய CE-25A மின்சார பயணிகள் விமானம், கடந்த 15ஆம் திகதி சீனாவின் பின்ஜோ (Binzhou) நகரில் தனது முதலாவது விமானப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. 19 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானம், ஒருமுறை மின்னேற்றம் செய்வதன் மூலம் சுமார் 499 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கக்கூடியது. அத்துடன்,...
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), 2027 ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம் முதல் 2035 ஆம் ஆண்டு வரையிலான பல்வேறு முக்கிய தொடர்களுக்கான தகுதிப் பாதைகளை வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளின் ஒரு பகுதியாக, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நுழைவதைக் குறிக்கும் லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 (LA28) போட்டிகளுக்கான தகுதிப்...
இலங்கைக்கு வடகிழக்கு திசையில், வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ (Deep Depression) வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.30 அளவிலான நிலவரப்படி, இத்தொகுதியானது திருகோணமலையில் இருந்து சுமார் 640 கி.மீ தூரத்தில், வடகிழக்கு திசையில் நிலைபெற்றிருந்தது. மேலும் இத்தொகுதியானது இலங்கையிலிருந்து விலகிச்...
