- Thursday
- November 12th, 2026
யாழ்ப்பாணத்தில் வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவித்தார்களா என்பது தொடர்பான சோதனை நடவடிக்கையின் போது, குடும்பத்தினருடன் காரில் வந்தவர் உட்பட இரு சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து வாகன சாரதிகள் போதைப்பொருள்...
கடந்த 02.11.2026 இரவு சைவ வித்தியா விருத்திச்சங்கத்தினால் நடாத்தப்படும் திருநெல்வேலி சைவச்சிறுவர் ஆண்கள் இல்லத்தின் மாணவன் ஒருவர் அங்கு இரவு கல்வி கற்பிக்க வந்த ஆசிரியரால் தாக்கப்பட்டு தலையில் காயமுற்ற சம்பவம் தொடர்பில் ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது குறிப்பிட்ட ஆசிரியர் பதிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சபையின் அனுமதி...
கார்பன் உமிழ்வு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார கார்களையே வாங்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவை 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக மாற்ற இந்திய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் தகவலின்படி, நமது நாட்டின் மொத்த...
சவூதி அரேபியாவுக்கும் யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமது வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்ட இரண்டு பெலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதறல்கள் புதன்கிழமை மக்கா பிராந்தியத்தில் விழுந்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் மக்கா பிராந்தியத்தை நோக்கி இந்த ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றை வான் பாதுகாப்புப் படையினர்...
இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் தொடர்பான காணொளி ஆதாரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக 070-4755600 என்ற விசேட வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக வேகம், பொறுப்பற்ற வாகன ஓட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் பாரிய விபத்துகளுக்குக் காரணமாக...
வரலாற்றுச் சாதனை படைத்த யூனியன் கல்லூரியின் மகளிர் உதைபந்தாட்ட அணிக்கு அமோக வரவேற்பு! அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்டத்திலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 16 வயதுக்குட்பட்ட மகளிர் உதைபந்தாட்ட அணியினர் வெற்றியைப் பெற்று தேசிய ரீதியில் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்....
வட இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பரவியுள்ள அடர்ந்த மூடுபனி மற்றும் புகைப் படலத்தை நாசா செயற்கைக்கோள் ஒன்று விண்வெளியிலிருந்து படம் பிடித்துள்ளது. இப்பகுதியில் குளிர்காலம் தொடங்கவிருக்கும் சூழலில், மோசமடைந்து வரும் காற்று மாசு நெருக்கடியை இந்தப் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது. இந்தப் புகைப்படம் இந்தோ-கங்கைச் சமவெளியில் அடர்ந்த சாம்பல் நிற மூடுபனி படர்ந்திருப்பதைக் காட்டுகிறது....
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோரின் சிறப்பான சதங்களின் உதவியுடன் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. நேற்றைய (11) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 404 ஓட்டங்களைக் குவித்து...
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன் திருமண விழா கிரீஸில் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல படங்கள் வௌியாகியுள்ளன. இந்தத் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவருக்கும் சன்...
சுற்றுலா விசா (Visit Visa) மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு தரப்பினரால் வழங்கப்படும் வாக்குறுதிகளை...
மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி அரேபியாவின் அரச வழக்கறிஞர் அலுவலகம் கைவிடத் தீர்மானித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக சவூதி நீதிமன்றத்தில் இனி எந்த வழக்கும் இல்லை என்றும்...
