- Wednesday
- November 11th, 2026
இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக மின்சாரத்தில் இயங்கும், விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் (eVTOL) விமானத்தின் முதலாவது உத்தியோகபூர்வ சோதனைப் பயணம் இன்று (11) கொழும்பு துறைமுக நகர (Port City) வளாகத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக இந்தச் சோதனைப் பயணம் அமைந்ததுடன், இதில் போக்குவரத்து...
1990 சுவசெரிய அவசர நோயாளர் அம்பியூலான்ஸ் சேவைக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 100 புதிய நோயாளர் அம்பியூலான்ஸ்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்திய அரசின் நிதிக்கொடையின் கீழ் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய அவசர நோயாளர் அம்பியூலான்ஸ் சேவை, 2018ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது. இதன் ஊடாக நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய...
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவின் பங்கேற்புடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து முக்கியமாகக் கலந்துரையாடப்படவுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. போரினால்...
மல்லாகம் நீதவான் நீதிமன்றக் கட்டளையின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், வழக்கு விசாரணைக்காக சிறைக்காவலர்களால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பியோடிய கைதியைத் தேடி மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில், அவர் காங்கேசன்துறை பகுதியில் வைத்து பொலிஸாரினால் சுற்றியடைக்கப்பட்டு மீளக்...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான இடைத்தரகர்களிடம் சிக்கிக்கொள்வதன் மூலம் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி முக்கியமான ஆவணங்களும் இழக்கப்படும் அபாயம் உள்ளதாகத் திணைக்களம் வலியுறுத்துகிறது. ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நேர ஒதுக்கீடுகளை (Appointments) மேற்கொள்வதற்கான...
நாட்டின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இச்சேவையை யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான பாதைகளை அடையாளம்...
இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய,...
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. லாகூர் நகரில் அதிகரித்து வரும் அடர் புகைக் மூட்டம் (Smog) மற்றும் காற்று மாசுபாட்டைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, நவம்பர் 17 ஆம் திகதி...
