- Tuesday
- November 10th, 2026
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த...
மாமனிதர் நடராசா ரவிராஜின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள மாமனிதர் ரவிராஜ் நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி...
நடிகர் ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழின் உச்ச நட்சத்திரமாக தன்னை மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத்...
நடிகர் சூர்யா நடிப்பில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். இதில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவ. 6 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே வரவேற்பு...
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ராவல்பிண்டியில் நேற்றைய தினம் (9) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் பந்துவீச்சைத்...
பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் சேவைபெறுநர்கள், முன்பதிவு (Prior Appointment) செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகனங்களைப் புதிதாகப் பதிவுசெய்தல், வாகன உரிமையை மாற்றம் செய்தல்,...
பிரான்ஸிலுள்ள நூற்றுக்கணக்கான சிறப்பங்காடிகளில் இருந்த குளிர்பாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களைப் (Fridges and Freezers) இலக்கு வைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானே இருப்பதாகப் பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noël Barrot), இந்த நடவடிக்கைக்காக ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத்...
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில...
மாத்தறை - கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 18 ஏக்கர் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்த சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (9) இரவு வேளையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தெவிநுவர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த...
சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (10) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. அனைத்து மாவட்ட கிளைச் சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் பங்கேற்கும் இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு...
ஈரானுக்கு எதிரான போர் "இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது" என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஈரானிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய தொடர் தாக்குதலை தற்போதைக்கு மீண்டும் தொடங்குவதற்குத் தாம் ஆயத்தமாக இல்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார். கட்டார்...
