- Thursday
- October 29th, 2026
இலங்கை மத்திய வங்கியினால் தடைசெய்யப்பட்டுள்ள பிரமிட் திட்டங்களின் பட்டியலில் Max App Media Ltd. மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்த்துள்ளதையடுத்து, அப்பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், Max App Media Ltd., அதன் இணை நிறுவனங்களான Max...
ஸ்பெயினில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன் 179-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் எச்சரிக்கை...
புது டெல்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் ‘நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மன்றத்திற்கு’ (Civilisational Dialogue Forum), பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சியை (Aurangzeb Khan Khichi) இந்தியா அழைத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மன்றத்திற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு...
யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளமையால் , நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நெடுந்தாரகை மற்றும் வடதாரகை என்பன ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில் , குமுதினி படகு...
திருகோணமலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில், புதன்கிழமை (28) அன்று சந்தேகநபரொருவர் கூர்மையான சிறு ஆயுதத்தால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டதில் படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இச்சம்பவத்தின் போது தடுக்க முற்பட்ட மேலும் இருவரும் லேசான காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
இணைய பிரபலத்திற்காகவோ, வணிக லாபத்திற்காகவோ குழந்தைகளைப் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், இலங்கை அரசு புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையுடன் (NCPA) இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இந்த வழிகாட்டுதல்களை இறுதி செய்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழுவினால் வரைவு செய்யப்பட்ட...
நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' பயனாளிகளைத் தெரிவு செய்யும் திட்டத்தின் புதிய நடைமுறையின் கீழ் 1,391,830 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2025.12.15 ஆம் திகதியிட்ட 2497/03 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் 'தீவிர வறுமைக்கோடு' (Extreme Poor) மற்றும் 'வறுமைக்கோடு' (Poor) ஆகிய...
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராசா மற்றும்...
