தலைமறைவாக இருந்த தி.மு.க. கவுன்சிலர் கைது!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனியார் பாடசாலைகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ.. பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்ததாக தனியார் பாடசாலைகள் சங்கம் சார்பில் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது...

ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அவதாரம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் இருந்து தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் சந்தீப் கிஷன் நடித்த ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே அவரது இயக்கும் திறமை மற்றும் உருவாக்கம் பலராலும் பாராட்டப்பட்டு சினிமா வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றது. இயக்குனராகத்...
Ad Widget

பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகங்களில் நாளை முதல் இணையவழி முன்பதிவு கட்டாயம்!

யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், வவுனியா மற்றும் மாத்தறை ஆகிய பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகங்களில் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்குச் செல்வதற்கு முன்னர் இணையவழி முன்பதிவு (Online Appointment) செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், நாளை மறுதினம் (2026 ஒக்டோபர் 29) முதல் கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி,...

தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழ்நாட்டின் தேனி கிளைச் சிறையில் திங்கள்கிழமை (26) நள்ளிரவில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்குள் சென்ற சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் துணிச்சலான முறையில் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் காவல்...

மூன்று மாடி வீட்டிலிருந்து விழுந்த சிறுமி உயிரிழப்பு!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயார்ட்ஸ் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீட்டின் மேல் மாடியிலிருந்து விழுந்து காயமடைந்த 15 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார்...

ட்ரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தெற்கு டார்பூரின் தலைநகரான நியாலா நகரில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை ஒன்றின் மீது சூடானிய இராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த தாக்குதலில் மேலும் 113 பேர் காயமடைந்தனர் என்று மனித உரிமைக் குழு ஒன்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்துள்ளது. சூடானில் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப்...

யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையச் சர்ச்சை: இ.போ.ச டிப்போ முகாமையாளரின் விளக்கம்

இலங்கை போக்குவரத்து சபையினருக்கு என யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையம் இருக்கும் போது வேறு இடங்களுக்கு சென்று அங்கிருந்து சேவையை ஆரம்பிக்க வேண்டிய எந்த தேவையும் தமக்கு இல்லை என யாழ்ப்பாண சாலை முகாமையாளர் பிறகலாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே, நெடுந்தூர போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியார்...

இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு!

லாகூரில் நடைபெற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 25.3 ஓவர்களில் 110...

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில் இந்திய பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டார். அங்கு...

காணாமல்போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, வான்படை!

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று மீனவர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைக் கடற்படை மற்றும் வான்படைகள் இணைந்துள்ளன. இதற்கான அவசர நடவடிக்கைகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முன்னெடுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு, இலங்கைக் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோருடன் அமைச்சர் தொடர்புகொண்டு மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து,...

இலங்கை மாணவர்களுக்கு கொரியாவில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு!

தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக கொரிய குடியரசின் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகத்தை மேற்கொள்வதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தொழிற்பயிற்சிகள் மற்றும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக கொரிய...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில் ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரு கட்சிகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திப் பணிகள் போன்றவற்றில் ஒரே கட்சியைப் போல இணைந்து இயங்குவதற்குத் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பைத்...