இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் (SPMC) பல்வேறு பதவி நிலைகளுக்கு வெற்றிடங்கள்!

இலங்கை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் (State Pharmaceuticals Manufacturing Corporation - SPMC) காலியாகவுள்ள பல்வேறு உயர் மற்றும் நிர்வாகப் பதவி நிலைகளுக்குத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகள்: General Manager (HM 2-1) Deputy General Manager - Planning...

தேசிய ஒலிம்பிக் குழுவில் HR & Administration Officer வேலைவாய்ப்பு!

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு (NOCSL) மற்றும் இலங்கை காமன்வெல்த் விளையாட்டு சங்கம் (CGASL) ஆகியவை இணைந்து, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஒருவரை HR & நிர்வாக அதிகாரி (HR & Administration Officer) பதவிக்கு விண்ணப்பங்களை கோருகின்றன. நிறுவனம் பற்றி: NOCSL மற்றும் CGASL ஆகியவை இலங்கையை சர்வதேச விளையாட்டு அரங்குகளில் பிரதிநிதித்துவப்படுத்தும்...
Ad Widget

திலீபன் சிலை விவகாரம்: 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு!!!

யாழ்ப்பாணம் நல்லூரில் திலீபனின் சிலையை நிறுவியமை மற்றும் திறப்பு விழாவை ஏற்பாடு செய்தமை தொடர்பில், அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அகற்றப்பட்ட சிலை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பொருளாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுமக்கள்...

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை?

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) யோசனை தெரிவித்துள்ளது. தற்போதைய நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் சர்க்கரையைச் சேர்க்க நிறுவனங்களுக்கு அனுமதி உள்ள நிலையில், புதிய விதிமுறைகளின் மூலம்...

இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலைச் சமூகத்தினரும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன்,...

திலீபன் நினைவேந்தல் : அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றச் செயற்பாடுகளை பொலிஸார் ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவர்கள் எப்போது சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு...

செம்மணி மனிதப் புதைகுழி: நீதிக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார். கனேடிய பாராளுமன்ற வளாகத்தில்...

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை தீவிரமாக உள்ளது என்றும், விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது...

சூடானில் மக்கள் கூடும் சந்தை மீது தாக்குதல்! குறைந்தது 153 பேர் பலி!!

சூடானில் இருந்து 2011 இல் பிரிந்து தெற்கு சூடான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையில் உரசல்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சூடான் மற்றும் தெற்கு சூடானுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியான அபியே நகருக்கு வடக்கே உள்ள அமியட் சந்தையின் மீது டிரோன் தாக்குதல் நடந்துள்ளது. சந்தைக்குள் பல இடங்களில் டிரோன்...

டெங்கு அபாயம் – அடையாளம் காணப்பட்ட 32 சுகாதார அலுவலர் பிரிவுகள்!!

நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுகாதார அலுவலர் பிரிவுகளைக் குறிவைத்து, ஒரு சிறப்பு நுளம்பு ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்புத் திட்டம் நவம்பர் 2 முதல் 7 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும் என்று சமூக மருத்துவ நிபுணர் பிரஷில...