- Wednesday
- October 21st, 2026
செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசிமெழுகும் சூழலை உருவாக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்துணிவோடு இந்த விவகாரத்தில் கரிசனை செலுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும்...
விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் (2026) தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (20.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதுவரை நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த இச்சுற்றுத் தொடர்,...
வடக்கு மாகாணத்திற்கு வடகிழக்கு திசையில் நிலை கொண்டிருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது இன்று (21) காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளதாகயாழ். பல்கலைக்கழக புவியியல் துறைப் பேராசிரியரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்தக் காற்றழுத்த சுழற்சி எதிர்பார்த்த வேகத்தில் நகராமல், மிகக் குறைந்த வேகத்தில் நகர்ந்து தற்பொழுது வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு பகுதியை...
நாட்டின் 7 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவிப்பானது மத்திய, சப்ரகமுவ, வட, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்குச் செல்லுபடியாகும். இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வட, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில்...
பண்டாரவளை பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்துமுல்ல, சொரகுண பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்களுக்கான தபால் கடிதங்களை விநியோகிக்காமல் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள் (Short Eats) மற்றும் பராட்டா ஆகியவற்றின் விலைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை உணவகங்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், இந்த உணவுகளின் விலைகளைச் சிறியளவில் உயர்த்தத் தீர்மானித்துள்ளதாகத்...
தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை எதிர்காலத்தில் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், அதுவரையான நிலைமாற்றுக் காலத்தில் இரு நிர்வாகங்களும் இணைந்து செயற்படுவதற்குப் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் மத்திய சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினரின் பங்கேற்புடன் நேற்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை...
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, நபர் ஒருவர் தனது காரால் மோதியதுடன், மீண்டும் காரைப் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாவது முறையாகவும் அவர் மீது மோதியதில், அந்த உறுப்பினரின் கால் அகற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களும் அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மெல்போர்னுக்கு வடக்கே...
வார இறுதியில் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களுக்குப் பின்னர், இரவு நேரக் கட்டுப்பாடுகளால் அமைதி திரும்பியதைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் உள்ள அதிகாரிகள் செவ்வாய் (20) அன்று பகுதி ஊரடங்கு உத்தரவுகளை நீட்டித்தனர். திங்களன்று பல நகரங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் இரவு நேரத்தை அமைதியாக வைத்திருக்க உதவியுள்ளன என்றும், தேவைப்படும் இடங்களில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்...
ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வரலாறு நிரூபித்து வருவதாக அக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கு கட்டடம் மற்றும் ஊர்காவற்துறை பகுதியில் அமைந்துள்ள கட்சியின் பிரதேச அலுவலகம் ஆகியவற்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் தேடுதலை நடாத்தி இருந்தனர்....
2026/2027 ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் பல புதிய அனுகூலங்களை சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, செவிப்புலன் கருவிகளைப் (Cochlear Implants) பழுதுபார்ப்பதற்காக 75,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும், நாட்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு 20,000 ரூபாய் வரை அனுகூலங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தோற்...
செம்மணி புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு என்பன காரணமாக இருந்திருக்கலாம் என்றும், இந்த புதைகுழியானது முறையான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கை, பேராசிரியர் ராஜ் சோமதேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில்...
இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகு கைது செய்துள்ளது. டெலிகிராம் (Telegram) செயலி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழியில் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி 12,691,033 ரூபாயை மோசடி செய்தமை...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழ்வு பிரதேசமாக உருவாகும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தொகுப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மழையின் அளவு இன்று (21) முதல் வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்கக்...
உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை அதனைத் திறக்கப் போவதில்லை என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்...
மின்சாரத் தேவையை முகாமை செய்வதற்காக நாட்டின் 4 வலயங்களில் இன்றைய தினமும் (21) மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் ஜயநாத்...
அரியாலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றைச் சுத்தம் செய்து நீர் இறைத்தபோது, கிணற்றுக்குள் இருந்த சாக்குமூட்டைகளில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் நேற்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூட்டைகளை வெளியே எடுத்துச் சோதனையிட்டபோது, அவற்றுக்குள் பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது....
