- Friday
- October 9th, 2026
சர்வதேச அளவில் மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காகத் தளர்வின்றிப் போராடி வரும் சர்வதேசச் சட்ட வல்லுநரும் தென்னாப்பிரிக்கத் தமிழ் வம்சாவளியுமான நவநீதம்பிள்ளைக்கு (நவிப்பிள்ளை) 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் டேர்பன் நகரில் ஒரு ஏழைப் பேருந்து நடத்துநரின் மகளாகப் பிறந்து, நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன்...
மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகம் குறித்த கவலைகள் தணிந்துள்ளதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவைச் சந்தித்துள்ளன. அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னர் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச கச்சா...
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (The Open University of Sri Lanka) கிளிநொச்சி கற்கை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாகவுள்ள Operation Assistant பதவிக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவி விவரங்கள்: பதவியின் பெயர்: Operation Assistant (ஒப்பந்த அடிப்படையில்) பணிபுரியும் இடம்: கிளிநொச்சி கற்கை மையம் (Kilinochchi Study Centre) பணிப்பக்க காலம்:...
கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'செயற்கை முறை கருக்கட்டல்' சேவையைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்குத் தேவையான வளங்கள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்கை முறை கருக்கட்டல் சேவையின்...
அஜித் – சரண் கூட்டணியில் கைவிடப்பட்ட ‘ஏறுமுகம்’… பின்னர் விக்ரமின் மெகா ஹிட் ‘ஜெமினி’யான சுவாரஸ்யம்!
நடிகர் அஜித் நடித்து திடீரென கைவிடப்பட்ட திரைப்படம், பின்நாளில் விக்ரம் நடித்து பிளாக்பஸ்டர் ஆனது. அதைப்பற்றிதான் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கவிருக்கிறோம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் கடைசியாக நடித்து குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த...
செம்மணி மனிதப் புதைகுழிக்கும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையே தொடர்பு இருந்திருக்கலாம். செம்மணியில் டக்ளஸ், வெட்டினாரா சுட்டாரா என்று பார்க்கும்போது நான்...
ஏ9 வீதியில் புளியங்குளம் புதூர் பகுதியில் இன்று (9) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் ஒரு வயது நிரம்பாத குழந்தையும் உயிரிழந்ததோடு, குழந்தையின் தாய் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனந்தர் புளியங்குளம் பகுதிக்கு நெல் விதைப்பதற்காக அதிகாலை மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், அவர்களது குழந்தை சென்றுகொண்டிருந்தபோது, புதூர் பகுதியில் வாகனம் ஒன்றை...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (09) தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கண் பாதிப்பு காரணமாக நேற்று (08) சிறைச்சாலை மருத்துவ நிபுணரிடம் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இதன்படி, மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய...
நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மனநல வைத்தியர்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது,...
ஐந்து மாவட்டச் செயலகங்கள் மூலம் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் வசதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் எடுத்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டச் செயலகங்களில் பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்....
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்பு எந்த நேரத்திலும் அமெரிக்கா ஈரானைத் தாக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்ருத் சமூக ஊடகத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஈரான் மீதான தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில்...
சிறுமிகளை பாலியல் வன்புணர்ந்த குற்றம் இலங்கையில் பிறந்த பௌத்த தேரர் ஒருவருக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள விகாரை ஒன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் வன்புணர்ந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்னில் உள்ள தம்ம சரண விகாரையின் (Dhamma Sarana) விகாராதிபதியான 71...
இந்தோனேஷியாவின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாக பரவிவரும் காட்டுத் தீ காரணமாக உருவான அடர்ந்த புகைமூட்டம், நாடு முழுவதும் பரவியுள்ளதுடன் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய அண்டை நாடுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் இந்தோனேஷியாவில் பதிவான மிகவும் மோசமான காட்டுத் தீ பருவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. விவசாயிகளும் நிறுவனங்களும்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை பெற்றுள்ளது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே இரண்டாம் இடத்திற்கான கடும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 06 ஆம் திகதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6...
சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ் மக்களும் தமிழ் தேசமும் எதிர்கொண்ட பெரும் ஆபத்துகளையும், எதிர்காலத்தில் வரவிருந்த அரசியல் அபாயங்களையும் முன்னறிந்து எச்சரிக்கும் ஆற்றல் கொண்ட சிந்தனையாளராக...
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதேஇதனைக் குறிப்பிட்ட அமைச்சர் ஒரு வருட காலப்பகுதிக்குள் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார். மெட்ரோ பஸ்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களுக்குச்...
