- Thursday
- October 8th, 2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில், பல்கலைக்கழக சபை...
அரசத் துறைக்கு புதிதாக ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற தொழிற்சந்தையில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: “நாடளாவிய ரீதியில்...
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய மூவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த மூவரும் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி தற்போது தலைமறைவாக இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் ஹிமாலி செவ்வந்தி ராஜபக்ஷ பத்திரன, தாரிந்து ஜீவந்த ராஜபக்ஷ பத்திரன மற்றும் விராஜ்...
பொதுச் சுகாதாரத் துறையின் முக்கிய பங்காளிகளான குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 2,900 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். புதிய குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் 1,056 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) அலரி மாளிகையில்...
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited), தனது வீட்டுப் பாவனை எல்.பி. எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் நடப்பு ஒக்டோபர் மாதம் முழுவதும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டோபர் மாதத்திலும் தற்போதைய விற்பனை விலைகளே தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனை செய்யப்படும் லிட்ரோ எரிவாயு...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவுக்குப் புறப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட...
மெக்ஸிகோ தேசிய பாதுகாப்புப் படையில் 13 மாத வயதுடைய ‘கொமாண்டோ’ என்ற குட்டி நாய் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. 21 செ.மீ. உயரமும், சுமார் 7 கிலோ எடையும் கொண்ட கொமாண்டோ, பாதுகாப்புப் படையின் மிகச்சிறிய நாய் உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. கொமாண்டோவை அதன் வயதான உரிமையாளர்களால் தொடர்ந்து பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டதை...
இந்தியத் திரைப்பட நடிகை நமீதா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சௌத்திரி தம்பதியினர், வட மாகாண சுற்றுலாப் பணியகத்துக்கு வருகை தந்து வடக்கின் சுற்றுலாத்துறை முதலீடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தில் இடம்பெற்றது. வட மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் கலாநிதி...
பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) இராணுவத் தளத்தில் இடம்பெற்ற பயங்கரவாதச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், அங்கிருந்த தனது அனைத்துக் குண்டுவீச்சு விமானங்களையும் அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. குறித்த விமானப்படைத் தளத்திலிருந்து விமானங்கள் அமெரிக்காவிலுள்ள அவற்றின் சொந்த இராணுவத் தளங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர்...
