45 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை: இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ஜப்பானின் நிஷின் (Nisshin) நகரில் இன்று (1) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து...

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா?

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசலுக்கான விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (1) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்த விலை உயர்வினால்...
Ad Widget

நீருக்கடியில் இயங்கும் தானியங்கி ட்ரோன்களை இயக்கி சீனா கின்னஸ் உலக சாதனை

நீச்சல் குளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய ரோபோக்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக எண்ணிக்கையிலான தன்னாட்சி தானியங்கி ட்ரோன்களை இயக்கியதற்கான உலக சாதனையை சீன குழு ஒன்று படைத்துள்ளது ஷியான் தியான்ஹே மேரிடைம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து வடமேற்கு பாலிடெக்னிகல் பல்கலைக்கழகக் குழுவால் ஒரே நேரத்தில் இயக்கப்படும் மிக அதிகமான தன்னாட்சி ட்ரோன்களை...

ஜெயிலர் 2 படத்தில் இப்படியொரு காட்சியா?

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் உலகம் முழுவதும் கண்டிப்பாக ரூ 1000 கோடிகள் வரை வசூல் செய்யும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதோடு தமிழ் சினிமாவிற்கு இதுவரை ரூ 1000 கோடி என்பது வந்ததே இல்லை, அதனால் கண்டிப்பாக இந்த படம் ரூ 1000 கோடி...

நல்லூரில் ஏற்றப்பட்டது அணையா விளக்கு!!

நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் முதல் நாளை வெள்ளிக்கிழமை வரையில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக புதன்கிழமை மாலை தீபம்...

காங்கேசன்துறை முதலீட்டு வலயம்: 187 ஏக்கர் காணி மட்டுமே முதற்கட்டமாக விடுவிப்பு!

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் நேற்றைய தினம் (30.09.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில்...

அரவிந்த மற்றும் மனைவியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க சார்பாகப் பிணை நின்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் பிணையாக செலுத்தியிருந்த பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார். சர்ச்சைக்குரிய...

நடுவானில் பேரழிவைத் தடுத்த பயணிகள்! இஸ்ரேலிய பிரதமரின் அதிர்ச்சி தகவல்!!

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai - FZ1073) விமானத்தின் முதன்மை விமானியைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிய உதவி விமானி, விமானத்தை நடுவானில் வீழ்த்த முயன்றுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வெளியுடப்பட்டுள்ள வீடியோ அறிக்கையில், இதனை ஒரு "மிகவும் கடுமையான பாதுகாப்பு...

சுப்மன் கில்லின் அதிரடி இரட்டை சதத்தால் இந்தியா அபார வெற்றி!

குவாஹாத்தியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 405 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்தது. அந்த அணி சார்பில் ஷாய் ஹோப்...

முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீச்சு!! மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு!

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மீது அதிகாரி ஒருவரால் காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு ஆணையாளர் சதீஷ் நேற்று (30) மாலை நேரில் சென்று விசேட ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகளை நேரில் சந்தித்த...

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை!!

சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்துள்ள சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பெறுமதியான பொக்கிஷம். அவர்களின் உடல் மற்றும் உள நல்வாழ்வைப்...

வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்வதற்கு சிறுவர்களை தயார்படுத்துவோம்!!

நாட்டின் சிறுவர்களுக்கு வேகமாக மாறிவரும் உலகை எதிர்கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு, புரிந்துணர்வு மற்றும் தன்னம்பிக்கையையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள சிறுவர் தினம் வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தங்களாக, ஒக்டோபர் 1 ஆம் திகதி இலங்கையில் ஒரு சிறப்புமிக்க தினமாக இருந்து வருகின்றது. இத்தினத்தில் நாம் எமது...