- Thursday
- September 10th, 2026
சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார். குறித்த பேருந்து தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, சேவையின்போது...
கடந்த ஆகஸ்ட் மாதம், உலகின் சராசரி புவி வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக உயர்ந்து, மனித வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற மையம் இன்று வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் சராசரி புவி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை...
வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 1979 ஆண்டு இலக்கம் 15ம் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம் வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன....
நேற்றிரவு பருத்தித்துறை – துன்னாலையில் கொடூர கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில் ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (10), அக்கட்சிக்கு எதிராகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார். வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது என்று இதன்போது வலியுறுத்திய அவர், அவசரநிலைக் காலத்தில் திமுக மேற்கொண்ட போராட்டங்களையும், குறிப்பாக ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின்’ (MISA) கீழ் தான் கைது செய்யப்பட்டதையும்,...
நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னையில் இருந்து வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள் நாகையில் இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர். இந்த...
எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு தகவல் கிடைத்துள்ளது. மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதகமான...
ஒரு நாடு தேசிய வழிமுறைகள், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்போது, அத்தகைய நாடுகளுக்கு உரித்தான பிரத்யேகத் தீர்மானங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நம்பகமான வழியொன்றை வழங்க வேண்டும் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று...
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும், இலங்கை தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று (9) முற்பகல் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. குறித்த...
தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்ட பின்னர், வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல்...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (09) முற்பகல் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றது. மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒகஸ்ட் 25 ஆம் திகதி தனது நியமனக் கடிதத்தைச்...
எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார். அதுவரை எண்ணெய் விலை குறையாது என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப்...
பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கரைக்கு அருகில் சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டின் கடலோரக் காவல்படை,...
ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (9) பதிவான நிலையில், காயமடைந்த 31 வயதுடைய இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில்...
