இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை வருகையையொட்டி, இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பன்முகச் செயல்பாட்டுத் திறன் கொண்ட போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் உதயகிரி’ (INS Udaygiri), மூன்று நாள் செயல்பாட்டுப் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக நேற்று (08) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, நடமாடும் பயிற்சிக்குழுவொன்றின் மூலம் தொழில்நுட்பப்...

கவிஞர் சோ. பத்மநாதனுக்கு ஜனாதிபதியால் ‘சாஹித்யரத்ன’ விருது வழங்கி கௌரவம்!

அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது...
Ad Widget

எனது உடல்மொழியில் உள்நோக்கம் இல்லை!!

என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என தமிழக முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கப் பதிவில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று பொலிஸ் மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது...

டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும்!!

இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை!!

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவ்வருடத்திற்குள் 50 வீத ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மேலும், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்த்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாண சபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைகள் கோரினால் மேலதிக நிதியையும்...

தனியார் துறையினருக்கு இணையவழி மூலம் ரயில் பருவச்சீட்டு!!

தனியார் துறை ஊழியர்கள் ரயில் மாதாந்த பருவச்சீட்டுக்களை இணையவழி மூலம் பெற்றுக்கொள்வதற்கான வசதியை எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கைத் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாகத் தேவைக்கேற்ப மாதாந்த பருவச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும். இதுவரை...

ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு!!

ரஷ்யாவின் வட காகசஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிஷிர்ஹி மலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 6 பேர் பாய்காயமடைந்துள்ளதுடன், 6 பேர் மாயமாகியுள்ளதாக அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மொத்தம் 33 பேரைக் கொண்ட மலையேற்ற வீரர்களின் குழுவினர் மிஷிர்ஹி மலையில் ஏறிக்கொண்டிருந்த...

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!!

அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது. ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும்...