- Friday
- September 11th, 2026
எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. தஹாப்-நுவைபா வீதியில் அல்-சாடா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிப் பயணித்தபோதே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும்...
ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஏழு தாழ்வான தள அமைப்பு கொண்ட (low-floor) பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜப்பானின் யோகோஹாமா நகர மக்களால் கூட்டாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த ஏழு புதிய பேருந்துகளையும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு,...
2026 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும்-05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென இன்று (02.09.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து விடைத்தாள் மதிப்பெண்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் இறுதிக்கட்ட ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகப்...
யாழ். பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது விடயம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள் -...
தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன. ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம்...
அமெரிக்காவின் சந்தியாகோ நகரிலுள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்த சம்பவத்தை இணையத்தில் நேரலை செய்வதற்கு உதவியதாகக் கூறப்படும் 17 வயது சிறுமி மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மே 18ஆம் திகதி சந்தியாகோ இஸ்லாமிய மையத்தில் 17 மற்றும் 18...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த ஊடகவியலாளரிடம்...
தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனம் தெரியாத நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது. வல்லலை - அராலி வீதியில் அமைந்துள்ள தென்னிந்தியத் திருச்சபை இடுகாட்டில் (தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை ஒத்த வடிவில், போர் முடிவடைந்த பின்னர்...
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது தமிழ் சினிமாவில் அவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்ற கேள்விக்கு, எந்தவித தயக்கமுமின்றி நடிகர் தனுஷின் பெயரை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த உரையாடலின் போது, "தமிழ் சினிமாவில் உங்களின்...
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 36 வயதான முகமது அப்பாஸ், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் தனது பெயரை கௌரவப் பலகையில் (Honours Board) பதிவு செய்துள்ளார். இப்போட்டியில் அவர்...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் ஒரு கும்பல், தங்களை தமிழக முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, ஏழை எளிய மக்களிடம் நிதியுதவி மற்றும் கடன் வாங்கித் தருவதாகக்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...
இந்தியாவின் பஞ்சாப் ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று (02) அதிகாலை 1.44 மணியளவில் ரிக்டர் அளவில் 3 நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.124 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில்...
