அஜித் குமாரின் ‘DareDevil’: மோகன்லால் விலகலா?

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைகோர்க்கும் புதிய திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' என தலைப்பிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமாருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவர் 'பிரேவ் ஹார்ட்ஸ்...

அனிருத் – காவ்யா திருமண திகதி வெளியானது!

இசையமைப்பாளர் அனிருத்தும் பிரபல தயாரிப்பாளர் மதுரம் தொழிலதிபரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து இவர்கள் இருவரிடமிருந்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், பிரபல நடிகர் YG மகேந்திரன் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என்பதை உறுதி செய்தார். இந்நிலையில்,...
Ad Widget

தினேஷ் சந்திமால் வைத்தியசாலையில்!!

காலி மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (18), களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் உபாதைக்கு உள்ளானார். எல்லைக் கோட்டிற்கு அருகில் நான்கோட்டத்தை (four) தடுக்க முயன்ற போது, அவரது வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உபாதை...

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்து வெற்றிகரமாக 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோலி, உலகக் கிரிக்கெட்டின் முன்னணி துடுப்பாட்ட வீரராக உருவெடுத்துள்ளார். டி20 போட்டிகள் மற்றும்...

3 தமிழர் சுட்டுக் கொலை!! ‘உங்க வேலையை பாருங்க’.. தமிழ்நாடு அரசுக்கு டிகே சிவகுமார் சொன்ன பதில்!

கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு அரசும் தமிழக அரசியல் தலைவர்களும் தலையிடக் கூடாது என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின்...

‘சிக்மா’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் விஜயின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப மற்றும்...

முன்னாள் அமைச்சர் கெஹெலிய கைது!!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக...

அகில விராஜ் மற்றும் அவரது ஊழியர் பிணையில் விடுவிப்பு!!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர்...

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களுக்கு எதிராக வழக்கு!!

வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்ரன் சுதாகர், வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

யாழில்.கத்திமுனையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றத்தில் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய இளைஞன் ஒருவர் முயன்றதாக பெண்ணொருவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாண...

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் நடைபெற்றது. இதில்...

யாழில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் மரணம்!

யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவில் இரண்டாவது நாள் பரீட்சை எழுதும்போது மயக்கம் ஏற்பட்டது. இதன்போது அவரது...

“நீதியின் ஓலம்” சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவடைந்த பேரணி!

''சர்வதேச விசாரணை தேவை'' என்ற கோரிக்கையை முன்வைத்து, தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. நேற்று காலை யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணியாக ஆரம்பமான போராட்டம், வடக்கு – கிழக்கைச் சேர்ந்த மக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து ஆஸ்பத்திரி...

செம்மணியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 54 ஆவது நாளான நேற்று (17) 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 108 நாள்...

முருகனின் நகைகளை திருடிய ஐயருக்கு வெளிநாட்டு பயணத் தடை!

தோட்டத்துறை (ஸ்லேவ் ஐலண்ட்) அருள்மிகு லெட்சுமி முருகன் கோயிலுக்குச் சொந்தமான, சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அக்கோயிலின் பிரதம குருவுக்குக் கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையை விதித்துள்ளது. சதீஸ்வர குருக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன்,...

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளருக்கு கட்டாய விடுமுறை!!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளரைக் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பளத்துடனான இந்த கட்டாய விடுமுறைக் காலத்தில், அதிகாரசபையின் அலுவலகம் அல்லது பணித்தளங்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், தலைவரின் அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்றும் அந்த கடிதத்தில்...

வங்கி அதிகாரிகளால் $1 பில்லியன் நிதி வௌியேற்றப்பட்ட விதம் வௌியானது!!

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நாட்டின் பிரதான 4 தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நாட்டிற்கு எந்தவொரு பொருளையும்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!!

இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அப்பிரிவின் அண்மைய தரவுகளின்படி, ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 6,914 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 19,671 பேருக்கும், கொழும்பு மாவட்டத்தில் 18,289 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 6,635 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 6,040 பேருக்கும்...

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள ஆயத்தமாகும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயம் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய...

ட்ரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!!

ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலையடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், அது 91.24 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts