ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு சந்தேகநபரும் தலா ரூ. 50 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரு சந்தேகநபர்களுக்கும் வெளிநாடு செல்லத் தடையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.