- Friday
- August 14th, 2026
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, வடக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணி நேற்றையதினம் நடைபெற்றது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆரம்பமான பேரணி, பலாலி வீதி, நாவலர் வீதி, கே.கே.எஸ். வீதி மற்றும் வைத்தியசாலை வீதி...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 09 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழ் நாட்டு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 09 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகத் தெரிவித்து இலங்கைக் கடற்படையினரால்...
நடிகர் சீயான் விக்ரம் instagramல் நுழைந்த பிறகு அடிக்கடி அவரது போட்டோஷூட் ஸ்டீல்கள் மற்றும் பர்சனல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு அரிய வகை குரங்குடன் விளையாடுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. லார் கிப்பான் என்ற அந்த அரிய வகை குரங்கு வீட்டில்...
அஜித், விஜய் இன்று அவர்களுக்கு பிடித்த துறையில் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக, அஜித் கார் ரேஸில் முத்திரை பதித்து வருகிறார். அஜித், விஜய் மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்பு போது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததனர், பிறகு அஜித் பிரியாணி செய்து போட்டார், விஜய் ஒரு வாட்ச் கிப்ட்...
சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் படி 2...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. அதற்கமைய நேற்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் கடந்த ஏப்ரல்...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில்,...
வத்தளை, கதிரான பகுதியில் உள்ள விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்தொன்றின் போது நபரொருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தின் பின்னர் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இரண்டு சந்தேகநபர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் (13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளால், வௌ்ளை மாளிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தகவலுக்கான எவ்வித ஆதாரமும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு உறுதியாக கிடைக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ்...
இந்தியாவின் மகாராஷ்டிராவில் இன்று (14) அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் சுமார் 3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 80,000 முதல் ஒரு இலட்சம் வரையான சட்டவிரோத துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க பெருமளவிலான துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களிடம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகள்...
இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களிடமிருந்து பணம் வசூலித்த இருவர் நேற்றுமுன்தினம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் தலையீட்டுடன் இஸ்ரேலில் வழங்கப்படும் கட்டுமானம் மற்றும் உணவகத்துறை...
மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு ஆகியவற்றால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உள்ள சில மாலுமிகள் கப்பலில் இருந்து கடலில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாகவும், கப்பலில் உள்ளவர்களின்...
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும் இதுபோன்ற கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400...
