- Thursday
- August 13th, 2026
தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். "எனது நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது எங்களிடம் உள்ள அதிகாரத்தையோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அடுத்ததாக உபுல்...
2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. காசோலை (Cheque), வங்கி வரைவோலை (Bank draft) அல்லது கொடுப்பனவு...
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்லா மீண்டும் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். தனஞ்சய டி சில்வா அணிக்குத் தலைமை தாங்குவார், அதேவேளையில் கமிந்து மெண்டிஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காயம்...
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வேறு பகுதி மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றையதினம் 12 திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது....
கீரிமலை பகுதியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினமான நேற்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு...
தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (12) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 9 இந்திய கடற்றொழிலாளர்களும், அவர்களின் படகுகளுடன் மேலதிக...
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் பராசக்தி. இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியானது, பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தன. பராசக்தி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் சேயோன். தாய் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் தான் படம் தயாராகி வருகிறது. கமல்ஹாசன்...
தளபதி விஜய் நடிப்பில் அவரின் கடைசி படமான ஜனநாயகன் பல தடைகளை தாண்டி கடந்த மாதம் திரைக்கு வந்தது. இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது அனைவரும் அறிந்தது தான். அப்படி படம் லீக் ஆகியும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ 300 கோடி வசூலை குவிக்க, கண்டிப்பாக இந்த சாதனை எல்லாம்...
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (12) நடைபெற்றது. இதன்போது, 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் அகழ்வு...
இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். இளம் தலைமுறையினர் செயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் கூறுகிறார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கல்வி பயின்று வந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொலையை அவருடன் தங்கியிருந்த 18 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவரே செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட...
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபா உயர்வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம்...
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், இலங்கை – அமெரிக்கா...
யாழ். நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளில் ஒன்றான செம்மணி வீதியில் காணப்படும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றுவதுடன், வீதியோரங்களில் வளர்ந்துள்ள சிறு புற்கள் மற்றும் தேவையற்ற தாவரங்களை அகற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை நல்லூர் பிரதேச சபை ஆரம்பித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செம்மணி வீதிப் பகுதியில் காணப்பட்ட பற்றைகள் வெட்டி அகற்றப்பட்டு, குறித்த...
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.98% ஆனோர், அதாவது 48,244 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். மாவட்ட ரீதியாக அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கு...
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவே அவர் இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகவும், அந்த முடிவை முழுமையாகப் புரிந்துகொண்டு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி தனது சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும்...
