யாழில். மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள உணவுத் திருவிழா!!

வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' (Visit Jaffna 2026 – Cultural and Culinary Festival) எதிர்வரும்...

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்!!

அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில் 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்...
Ad Widget

எட்டாவது வாரமாகவும் பலாலியில் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த...

டெங்கு காய்ச்சல் : இதுவரை 89,639 பேர் பாதிப்பு ; உயிரிழப்புகள் 65 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நடப்பு ஆண்டில் இதுவரை நிலவும் காலப்பகுதியில் 89,639 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மாதாந்தத் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533...

விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்!!

இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது மகன் ஏ.ஆர்.அமீனும் இசைத்துறையில் களமிறங்கி தனது அப்பாவுடன் பயணித்து வருகிறார். இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை 3.30 மணியளவில் தனது விலை உயர்ந்த காரில் நண்பரோடு கிண்டி நோக்கி சென்றிருக்கிறார். அப்போது ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருவே ரேபிடோ வேகன்-ஆர் வாகனம்...

LPL கிண்ணத்தை கைப்பற்றியது கோல் கெலன்ட்ஸ் அணி!

2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிப்பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஜப்னா கிங்ஸ் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து...

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்!

தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்பகத்தரு வளத்தின் கீழ் வடக்கு தெங்கு முக்கோணம் திட்டத்தின் மற்றொரு கட்டம் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நடைபெற்றது. 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இது நடத்தப்படுகிறது....

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்த நிலையங்களுக்கு அபராதம்!

அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக...

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!!

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர்...

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!!

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார். கிராம...

அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த கடல் பாதையை மீண்டும் திறக்க வேண்டுமானால், இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த...

நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தனியார் வைத்தியசாலைகள்!!

காலாவதியான இரசாயனப் பொருட்கள், தடுப்பூசி ஊசிகள் பயன்பாடு மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்தமை தொடர்பில் கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டளைகளைக் கடுமையாக மீறிய குற்றத்திற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) கேகாலை மாவட்ட...

அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்....