ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றயதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ...

ரயில் பயணி ஒருவரை தாக்கிய இலங்கை இளைஞருக்கு சிறை!

பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ‍இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25...
Ad Widget

ஓடும் மோட்டார் சைக்கிளில் பெண்ணை வீதியில் இழுத்துச் சென்ற நபர்

இந்தியாவின் பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் ராஜ்கிர் பகுதியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து பெண்ணொருவர் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பதிவு செய்து எக்ஸ் சமூக ஊடகங்கத்தில் பகிர்ந்த காணொளி தற்போது பரவலாகப் பகிரப்பட்டு...

7 மாதங்களாக ஆசிரியர் இல்லை ; பெற்றோர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு...

சர்வதேச விண்வெளி திட்டத்திற்கு இலங்கையிலிருந்து செனீசா குணவர்தன தேர்வு!!

எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்வியை தேசிய அளவில் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, தற்போது 200 இலங்கை மாணவர்கள் STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிர பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தேர்வுச் செயல்பாட்டின் அடிப்படையில், 18...

யாழில் ‘நேர்மை நடைபவனி’

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் 'நேர்மை நடைபவனி' நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் 'நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச...

5 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிணை!!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று (27) விசேட மனுத் தாக்கல் (Motion) ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு பிணை வழங்கப்பட்டது. அவருக்கு எதிராகக்...

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்த ‘வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்’ ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை...

ஹிட் பாடலுக்கு தனது மகனுடன் நடனம் ஆடிய பிரபு தேவா!!

உலக சினிமா மக்கள் கொண்டாடும் ஒரு நடன கலைஞர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன். அதேபோல் இந்திய சினிமா ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனாக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் பிரபு தேவா. நடனம், நடிப்பு, இயக்கம் என ஒரு ரவுண்டு வருகிறார். அவ்வப்போது மற்ற மொழிகளிலும் பாடல்களுக்கு நடன அமைப்பு செய்து வருகிறார், அந்த பாடல்களும் ஹிட்டாகிவிடுகின்றன....

நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதாக வரையறுக்கப்பட்டுள்ள முறையே 63 மற்றும் 65 வயது எல்லையை, அரசியலமைப்புத்...

கனடாவில் அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும், கட்டிடத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு மாத காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவான இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மார்ச் 10...

இரு இளைஞர்கள் உட்பட 6 பேரை பலிகொண்ட கோர விபத்துகள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற வாகன விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை திருக்கோவில் - பொத்துவில் வீதியின் விநயாகபுரம் 01 பகுதியில், பொத்துவில் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதியின்...

ஈரானுடன் பேச்சுவார்த்தை!! – டிரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சாதகமான வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றைய தினமும் (27) ஈரானுக்கும்...

இலங்கைக்கு 4ஆவது இடம்!

இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம்...

கடந்த ஆட்சிகளில் EPF, ETF நிதியில் 3,000 கோடி மோசடி!

கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியவற்றில் சுமார் 3,000 கோடி ரூபா வரையிலான பெருந்தொகை நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...