- Friday
- July 17th, 2026
எரிபொருளை விநியோகிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள QR ஒதுக்கீட்டு நடைமுறையை இந்தத் தருணத்தில் நீக்குவதற்கு எவ்வித முடிவும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளுக்கான ஸ்திரத்தன்மை இன்னமும் இல்லாமை காரணமாக, எரிபொருள் QR நடைமுறையை மேலும் தொடரவுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள்...
லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சூதாட்ட மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நடைபெறும் 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின்...
வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 13ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள்...
செம்மணி மனித புதைகுழியில் 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 34 வது நாளான நேற்று (16) 6 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்...
அமெரிக்காவிற்கு செல்லும் சர்வதேச மாணவர்கள், கலாசார பரிமாற்றத் திட்ட பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருக்கக்கூடிய வீசா காலக்கெடுவை கடுமையாகக் குறைத்து, நிலையான ஒரு காலப்பகுதியை நிர்ணயிப்பதற்கான புதிய இறுதி விதியை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை வியாழக்கிழமை (16) வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதிாக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக்கப்பட்டு...
தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சிங்கள மொழி பேசும் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்...
SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச்...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (16) வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 73,455 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் 50 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய...
ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை இந்தியா முழுவதும் 12 பேருக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்று ஏற்பட்டது என்றும், அவர்களில் நான்கு பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர் என்று ஆந்திர பிரதேச மாநில சுகாதார ஆணையர் ஜி. வீரபாண்டியன் தெரிவித்தார். இறந்தவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்சினைகள்...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார். SENA (South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி அடித்த...
மியான்மர் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐ.நா. அச்சம் தெரிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரைச் சேர்ந்த அகதிகள், பாதுகாப்பு மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 500 இற்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற 02 படகுகள் சமீப...
காசா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவின் வடக்கில் உள்ள துஃபா பகுதிக்கு அருகே நடந்த இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், கிழக்கு காசா நகரின் ஸைத்தூன் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த பீரங்கித் தாக்குதலில் மூன்றாவது நபர் கொல்லப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்....
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி. டி. விக்ரமரத்ன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது...
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் (2026) வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் இணையவழியில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் நேற்றைய தினம் 16ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க...
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026 தொடரின் தொடக்க விழா இன்று (17) கொழும்பு SSC மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின்...
