- Monday
- July 6th, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (5) கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் நேற்றைய தினமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) அச்சிறைச்சாலையில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதைத் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 பேர் ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 08 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,...
'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' ஆகிய தொடர் வெற்றித் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு முக்கிய இயக்குநர், நடிகர்,...
இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையில் (National Research Council - Sri Lanka) நிலவும் உதவிப் பணிப்பாளர், விஞ்ஞான/ஆராய்ச்சி அதிகாரி, மேலாண்மை உதவியாளர் (04 பணியிடங்கள்) மற்றும் ஓட்டுநர் (02 பணியிடங்கள்) ஆகிய காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு திகதி - 13-07-2026 தகைமைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை அறிந்துகொள்ள அவர்களின்...
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத்தின் திருமண விழாவில், நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், அவர் இயக்கியுள்ள முதல் படமான 'சிக்மா' ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகியுள்ளன. லைகா...
2026ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு சனிக்கிழமை (4) வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டியில், சுற்றுப் போட்டிகளான - துடுப்பாட்டம் (ஆண்/பெண்), உதைப்பதாட்டம், கரம், சதுரங்கம், பூப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், தாச்சி (ஆண்/பெண்), கயிறிழுத்தல்(ஆண்/பெண்) ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணங்கள்,...
ஜெயிலர் 2, டிசி, தர்மன், அரசன் என பல திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். இவருக்கும் ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும், வரும் நவம்பர் 12-ம் தேதி Seychelles என்ற இடத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த...
உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமாக அமையும் 'எல் நினோ' காலநிலை நிகழ்வு, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. எல் நினோ காலநிலை நிகழ்வுகள் பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை...
கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord's) மைதானத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர். இதன்படி, 7ஆவது முறையாகவும் டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அவர்கள், தங்களுக்கு சவாலளிக்க வேறு எந்தவொரு அணியும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை...
தமிழ் இறையோன்,எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து,தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி “என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில்,‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது....
யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவையின் தூதுக்குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 04.07.2026 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில்… இச்சந்திப்பின்போது,ஈழத்தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றமைக்கு நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்தும் அவர் உறுதியுடன் குரல்கொடுக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டனர். மேலும்,ஈழத்தமிழ்...
உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட பிரேசில்...
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, இதுவரை 30 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 34...
ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பானது ஓகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. [caption id="attachment_127561" align="aligncenter" width="760"] What is Brent Crude[/caption] மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் சீரடைந்து வருவதும் உலகளாவிய விநியோகம் அதிகரிக்க வழிவகுத்துள்ளதாகக்...
உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நியூயோர்க் நியூ...
மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு...
