- Tuesday
- June 30th, 2026
தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இந்த வசதி வழங்கப்படவுள்ளது. இது கட்டாயமானதொன்றல்ல என்பதுடன், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான பயனர் பெயரை (Username) ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் , பரிசுத்த பாப்பரசர் 14ஆம் லியோவால் நேற்று (29) நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், 2000ஆம் ஆண்டில் கொழும்பு மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்...
கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள்...
15 வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி, தொழில், விசா சேவை அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனத்தின் செயற்பாடுகள், யாழ் நகர மத்தியில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன், முன்னாள் நெல்லியடி மகாவித்தியாலய அதிபர் கலாநிதி சேதுராஜா, யாழ்...
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் இந்தியா தோற்றது குறித்து ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்தியா தோற்றது என்பதை விட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரு போட்டிகளிலும் களமிறக்கப்படவில்லை என்பதே ரசிகர்களின் ஆதங்கத்திற்கு முக்கிய காரணம். ஐபிஎல் 2026 தொடரில் அதிரடி காட்டிய...
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கே. பாக்யராஜ். தனது இயல்பான நடிப்பு, நகைச்சுவை கலந்த திரைக்கதை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட படங்கள் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். சமீபத்தில் அவர் மறைந்த செய்தி...
தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்ற வாகனங்களை இயக்குவது சட்டப்படி கடுமையான குற்றமாகும் எனத் தமிழகக் பொலிஸார் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொலிஸார்...
2026 உலகக் கிண்ணப் கால்பந்து தொடரின் வெளியேற்றுச் சுற்றில் (Knockout stage) பராகுவே அணியிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஜேர்மனி அணி தொடரிலிருந்து வெளியேற நேரிட்டுள்ளது. போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பராகுவே அணி சார்பாக ஜூலியோ என்சிசோ (Julio Enciso) ஒரு கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து, 54ஆவது நிமிடத்தில் ஜேர்மனி அணி சார்பாக கை...
நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29) இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் அநுராதபுரம், கல்கிரியாகம, சமனலவெவ மற்றும் கிரானேகம ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று அதிகாலை அநுராதபுரம் - ரம்பேவ வீதியின் சாலியபுர கல்வல சந்திக்கருகில் ரம்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வலது பக்கமாக திருப்ப...
நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். அத்துடன் 407 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின்...
இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள “Tell the IGP” திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ்...
தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த்...
சோன்வே பிக்சர்ஸ் (zonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கியுள்ளார். மேலும், பிரதாப் கண்ணன் மற்றும் இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல...
ஒரு காலத்தில் சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்’க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முன்னணி தொழிலதிபராக இருந்த குவோ வெங்குய், கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தப்பி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு தன்னை...
ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் அமைந்துள்ள தாய் மற்றும் சேய் நலன்புரி மையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். தனது மகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புரிமை தொடர்பான குடும்பத் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச...
ஆப்பிளின் வரவிருக்கும் முதன்மை மாடலான ஐபோன் 18, அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு மிக அருகில் உள்ளது. அதற்கு முன்னதாக, தொடர்ந்து நிலவி வரும் "மெமரி விலை உயர்வு" சிக்கல்கள் காரணமாக, ஐபோன் 18 ப்ரோவின் விலைகள் முந்தைய ஐபோன் 17 ப்ரோ மாடல்களை விட அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மேக், மேக்புக்,...
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள சூழ்நிலையில், அரசாங்கத்துடனான தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையால், இன்று (30) செவ்வாய்க்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு...
விசேட டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவில் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். எனினும், எம்மைச் சூழவுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும் எனவும், அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
