- Wednesday
- June 24th, 2026
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணியில், இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, 390...
கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரின் இறப்புக்கு நீதி...
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் "சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்" (Social Media Minimum Age Bill) இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக்...
கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க...
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்திற்கு 'தர்மன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இத்திரைப்படத்தை சுந்தர்.சி அல்லது சிபி சக்கரவர்த்தி இயக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து பின்வாங்கிய நிலையில், தற்போது...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் பலாலியில் உள்ள...
பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு பகுதியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அதனால் வெளிச்ச வீட்டு பகுதியை மக்கள் பார்வையிடவே , அவற்றை புகைப்படம் காணொளி எடுப்பதற்கோ இராணுவத்தினர் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் ,...
இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களின் போதும், வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பூசும் பாரம்பரிய நடைமுறையைச் சட்டப்பூர்வமாக முற்றாக நீக்குவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் மூலம், தேர்தல் வாக்கெடுப்பு நிலையங்களின் பணிகள் மேலும் வினைத்திறனாக மாறும் என்றும், அரசுக்கான மேலதிக செலவுகள் பெருமளவில் சேமிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை நேற்று (23) மேற்கொண்டனர். இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் தமது செயற்பாட்டை நாடு முழுவதும் முன்னெடுத்து வரி அறவீட்டு நடவடிக்கைகளை சீர் செய்தும் ஒழுங்கமைத்தும் வருகின்றனர். அதற்கமைவாக வவுனியாவிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரி அறவீடு...
ஏராளமான டிஜிட்டல் தள ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் பவிஷ் நாராயண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லவ் ஓ லவ்' திரைப்படம்- எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படத்தில் பவிஷ்...
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (23) அமர்வில் இடம்பெற்ற கரைவலை மீனவர்கள் பிரச்சனை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு...
கனடாவின் மொன்றியல் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் நிறைந்த மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டை நடத்திய...
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாளை கடந்த 22 ஆம் திகதி கொண்டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் அவரது...
தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டத்திற்கு இணையாக, விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் நேற்று (23)...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன....
ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்ற ஒன்று என அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
முழு ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை தாக்கங்களினால், கடந்த சில நாட்களுக்குள் பிரான்சில் மட்டும் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பெரும்பான்மையான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடுமையான வெப்ப காலநிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின்...
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை கடந்த (22) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 16...
மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் 20-வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்...
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 'சீ ரேஞ்சர்' (Sea Ranger) பன்னோக்கு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, நேற்று (23) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது. இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் உத்தியோகபூர்வ மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதனைத்...
Loading posts...
All posts loaded
No more posts
