சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி வல்வெட்டித்துறையில் ஆர்பாட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக் கோரி இன்றையதினம் (08) காலை 10.30 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தியில் ஆர்பாட்டம் இடம்பெற்றது. இதில் சமூக அரசியல் செயற்பாட்டாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளரான இரா. சுரேன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள், இளைஞர்களின்...

யாழில் மேடை பேச்சுடன் நிகழ்வை முடித்ததாக சலசலப்பு!!

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் கலந்து கொண்ட மல்லாகம் நிகழ்ச்சியில் பெண்ணொருவர் ஆக்கிரோஷமான கருத்துக்களை வெளியிட்டமையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பெண்கள் தொடர்பான கலந்துரையாடல் என கூறி தம்மை அழைத்து விட்டு மேடை பேச்சுக்களுடன் நிகழ்வினை முடித்து சென்றதாகவும் அதனால் தான் கதைக்க வந்த பிரச்சனை தொடர்பில்...
Ad Widget

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட...

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு!!

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நிலையில் அதிக ஆபத்துள்ள கரவெட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கோப்பாய், சங்கானை, சாவகச்சேரி, நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, உடுவில்...

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழி: எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியது!!

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், 72 நாட்களாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐத் கடந்துள்ளது. செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 302 மனித எலும்புக்கூடுகளில் 298 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு வருடத்திற்கும் மேலாக அகழ்வாய்வைக் கண்காணித்து வரும் பாதிக்கப்பட்டவர்கள்...