யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு!!

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும் இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் (14)...

ஆளுநர் அலுவலகம் முன் கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15) கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும்...
Ad Widget

தீ விபத்துக்குள்ளான மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!!

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வைத்தியசாலை சேவைகள் தொடர்பில் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி உடன் கலந்துரையாடியதுடன் அண்மையில் தீ விபத்திற்கு உள்ளன மருந்து களஞ்சிய சாலையையும் பணிப்பாளருடன் சென்று பார்வையிட்டார்....

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். வயலில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார்...

மருந்துகளின் விலைகளை 25 சதவீதத்தால் அதிகரிக்கக் கோரிக்கை!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் விலைகளை ஆகக்குறைந்தது 25 சதவீதத்திலாவது அதிகரிக்குமாறு மருந்து நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. மின்சாரக் கட்டண அதிகரிப்பு, ரூபாய்க்கு நிகரான டொலரின் பெறுமதி உயர்வு, கப்பல் கட்டணங்கள் மற்றும் மருந்து உற்பத்தி மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் கருத்திற்கொண்டு இந்த விலை...