- Friday
- February 13th, 2026
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அதனை நிறுத்தாது தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, பொலிஸார் வாகனத்தை நோக்கி ஐந்து தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்....
வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின்...
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (13) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை (03) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை, 2025 ஆம் ஆண்டிற்கான (2026...
வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம்...
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து...
