- Monday
- February 9th, 2026
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான...
காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்களே காரணம் என யாழ். பொலிஸ் நிலையத்தில் மகன் முறைப்பாடு செய்துள்ளார். சுன்னாகம் சூராவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வீரசிங்கம் அம்பிகைபாகன் என்பவர் கடந்த 23ஆம் திகதி காதுக் குத்து காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கண், காது, தொண்டை (ENT)...
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரண்டு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஆதரவாக இரண்டு குழுக்கள் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது இருவர் காயங்களுக்கு...
தபால் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை இன்று திங்கட்கிழமை (09) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் எடைக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 50 ரூபாவாக இருந்த சாதாரண கடிதத்திற்கான கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தபால் அட்டை ஒன்றின் கட்டணம் 20 ரூபாவிலிருந்து 40...
