நயினாதீவுக்கான படகு சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தீவகங்களுக்கான கடல் வழி போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டன. இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் சீரான காலநிலை நிலவுதானால் தீவகத்திற்கான கடல் வழி...

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 டிசம்பர் 8ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Ad Widget

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

முல்லைத்தீவு, நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளது. இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாலம் உடைந்ததன் காரணமாக முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு, முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய் பகுதிக்குமான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.