நயினாதீவுக்கான படகு சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தீவகங்களுக்கான கடல் வழி போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டன.

இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் சீரான காலநிலை நிலவுதானால் தீவகத்திற்கான கடல் வழி போக்குவரத்து சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறிகாட்டுவான் இறங்குதுறை மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts