வடமாகாணத்தில் காற்றில் சுவாசத்திற்கு ஒவ்வாத நச்சுத்தன்மை கொண்ட நுண்துகள்கள் கலப்பு??

இலங்கையின் வான்பரப்பில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்தியாவின் திசையிலிருந்து வரும் மாசடைந்த காற்று மற்றும் உள்நாட்டு வளிமண்டல நிலைமைகளால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம், சிலாபம், புத்தளம், காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் காற்றின்...

தையிட்டி விகாரையில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள மாட்டோம் – தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார். தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில்செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம்...
Ad Widget

இளைஞர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!!

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 'ஐஸ்' போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையான 60,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தாமர தர்ஷன தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை...

நுரைச்சோலையின் 2 மின்பிறப்பாக்கிகள் செயலழப்பு!!

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 600 மெகாவாட் மின் கொள்ளளவு தற்போது இழக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். லக்விஜய மின்நிலையத்தின் ஒரு மின் உற்பத்தி இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதுடன்,...

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா...

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு – பிரதமர் செயலகம் பணிப்புரை!

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு பாரப்படுத்தி நடவடிக்கை எடுக்க பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது. பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T....

தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது – வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்

‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால்,...

பொலிஸாரால் தாக்கப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதி!!

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நேற்றைய தினம் விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கபட்டது. குறித்த போராட்டத்திற்கு...

காங்கேசன்துறையில் மாபெரும் உணவு திருவிழா!! உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு!!

காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உணவு திருவிழாவில் கலந்துகொள்ள விரும்பும் , உள்ளூர் உற்பத்தியாளர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையில் பதிவு செய்யுமாறு தவிசாளர் கோரியுள்ளார். இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தி குறிப்பில், வலிகாமம் வடக்கு பிரதேசசபையின்...

பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு இளங்குமரனுக்கு உத்தரவு!!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது. கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம சேவகர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தன்னைத் தாக்கியதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று வியாழக்கிழமை (18) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளின் ஊடாக அந்தந்த பயனாளிகள் இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த...

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கியிராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய...

யாழில். தரையிறங்கிய மலேசிய விமானம்!!

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (15) தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது...

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....

தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம்!! கல்வி அமைச்சு

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 6 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக...

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி...

அனர்த்தத்தினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு!!

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை நாளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது....

தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுகள் வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது. குறித்த நினைவுகூரலை நேற்று காலை (14) தீவக நினைவேந்தல் குழு ஏற்பாடு செய்து முன்னெடுத்திருந்தது. முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமான குறித்த நினைவுகூரல் நிகழ்வில் தேசத்தின் குரலின் திருவுருவப் படத்துக்கு மலர்...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில், சுமார் 20 கிலோமீற்றர் (12 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு...

நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை வெளியீடு!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, சமூக அபிவிருத்தி குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு எந்தவொரு சட்டரீதியான அறிவித்தலும் வழங்கப்படவில்லை என இலங்கை கிராம அலுவலர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் அனர்த்தங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது...
Loading posts...

All posts loaded

No more posts