இலங்கைக்கு கிழக்கே தளம்பல் நீடிக்கிறது; பல பகுதிகளில் 100 மி.மீ. மழை

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (21) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்...