- Tuesday
- October 7th, 2025

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளான நேற்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற...

எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் வெளியிட்டுள்ளார். வர்த்தமானியின்படி, வியாபாரி எவரும் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, அடர்த்தி குறைந்த பாலிஎதிலின் (Low-Density Polyethylene), அடர்த்தி குறைந்த...

அரியாலை, சிந்துப்பாத்தி - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு தவணையிடுப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இவ் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, இவ் வழ்க்கை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.