தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து நேற்று மாலை (12) பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட...

வடக்கு, கிழக்கில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்தின் திகதியில் மாற்றம்!

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், இலங்கை தமிழரசு கட்சியினால் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு...
Ad Widget

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம்!

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வட்ஸ் அப் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இந்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் அனைவரும் 071- 8598888 என்ற வட்ஸ்அப்...

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரிப்பு!!

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வெலிசறை தேசிய மார்பு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் 2,000 - 3,000 நுரையீரல் நோயாளிகள் பதிவாவதாக தெரிவித்தனர். நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது என சுவாச நோய் வைத்திய...