- Saturday
- August 2nd, 2025

செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்...

இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்....

தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக காவல்துறை சைபர் குற்றப்பிரிவிலும் முறைப்பாடு அளிக்கலாம்.

நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என...

பழைய செம்மணி புதைகுழி வழக்கும் புதிய செம்மணி புதைகுழி வழக்கும் வேறு வேறு வழக்காக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புபடுத்த வேண்டிய நிலைமை இருப்பதனால் முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய செம்மணி வழக்கை புதிய வழக்குடன் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பு செய்வதற்கான ஆலோசனை நடக்கின்றது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். செம்மணி...

அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்க சோதனைகள் நடத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது. வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும்...

செம்மணி விவகாரம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தவும் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்குச் சென்றிருந்த எம்மை எதிர்த்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரச நிதி மூலோபய கூற்று தொடர்பான சபை...

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும். இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை...

சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார். அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம்...